இந்த சுலோகம் சொல்லி தியானம் செய்தால் சாய் பாபாவின் அருள் கிடைக்கும்

ஷீரடி சாயிபாபா தியான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி

இந்த தியான மந்திரத்தை ஜபித்தவாறு தினமும் தியானம் இருப்பது நல்லது. தினமும் தியானம் இருக்க முடியாதவர்கள் வியாழ கிழமைகளில் தியானம் இருக்கலாம். வியாழ கிழமை என்பது சாய் பாபாவிற்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் பலர் விரதம் இருந்து சாய் பாபா கோயிலிற்கு சென்று சாய் பாபாவை வழிபடுவது வழக்கம். பெரும்பாலான சாய் பாபா கோவில்களில் வியாழ கிழமைகளில் அன்னதான வழங்குவது ஏழைகளுக்கு உதவுவது போன்ற பல நல்ல காரியங்கள் நடைபெறுவதும் வழக்கம். ஷீரடி சாய் நாதனை போற்றுவோம் அவர் அருளால் இன்புற்று வாழுவோம்.