தோஷம் நீக்கி வெற்றி தரும் புத பகவான் மந்திரம்
மந்திரம் :
“ப்ரியங்கு கவிகாச் யாமம்
ரூபேணா ப்ரதி மம் புதம்
ஸௌம்யம் சௌம்ய குணோ பேதம்
தம் ப்ரணாமாம் யஹம்”
இம்மந்திரத்தை புதன் கிழமைகளில் காலை மற்றும் மாலையில், உங்கள் வீட்டில் புதன் பகவானின் அம்சம் கொண்ட “விஷ்ணு” பகவானின் படத்திற்கு முன்பு துளசி இலைகள் மற்றும் சாமந்தி பூ வைத்து நெய்தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். கோவிலுக்கு சென்று வழிபடுபவர்கள் அங்குள்ள புதன் பகவான் சந்நிதியில், பச்சைப்பயிறு அல்லது அப்பச்சைப்பயிராலயான ஏதேனும் ஒரு உணவு பண்டத்தை நிவேதனமாக வைத்து, தீபமேற்றி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட புதன் பகவானால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும். அதோடு தொழிலில் நல்ல முன்னேற்றம், எதிலும் வெற்றி இப்படி பல நன்மைகள் உண்டாகும்.