காரிய தடை நீங்க விநாயகர் மந்திரம்
விநாயகர் மந்திரம்:
ஓம் விக்ன நாஷனாய நமஹ
மிகவும் ஆற்றல் வாய்ந்த இம்மந்திரத்தை மாதத்தில் வரும் “சங்கடஹர சதுர்த்தி” தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்து பூஜை அறையை சுத்தம் செய்து, அரிசி மாவினால் பிள்ளையார் பிடித்து, மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து இம்மந்திரத்தை 108 முறை கூறி வணங்க வேண்டும். 1008 முறை உரு ஜெபிபிப்பது இன்னும் சிறப்பானதாகும்.
மேலும் அன்று மாலை வேளையில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று, அவருக்கு “பாலபிஷேகம்” செய்ய பால் தந்து அந்த அபிஷேகம் செய்யும் போது இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட உங்களுக்கு எந்த ஒரு விடயத்திலும் நீண்ட நாட்களாக இருந்து வந்த காரியத்தடைகள் நீங்கி, நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.