உழைப்பிற்கான செல்வம் நம்மிடம் சேர கூற வேண்டிய சாய் பாபா மந்திரம்
மந்திரம்:
“ஓம் சாய் ஸர்வ ஷக்திமானாய் நமஹ”
இம்மந்திரத்தை தினமும் காலையில் சாய் பாபா படத்திற்கு முன்பு நின்றோ அல்லது அவரை மனதில் நினைத்தோ 27 முறை கூறி வழிபடவேண்டும். மேலும் வியாழக்கிழமைகளில் வீட்டில் சாய் பாபாவின் படத்திற்கு முன்பு பழங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகள், கற்கண்டுகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனமாக வைத்து, பத்திகள் கொளுத்தி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்ட பின்பு நிவேதனமாக வைத்தவற்றை பிரசாதமாக உண்டால் அந்த சாய் நாதனின் அருளால் உங்கள் உடலிலும் மனத்திலும் ஏற்பட்டுள்ள மந்தத்தன்மை நீங்கும். உற்சாகமும் சுறுசுறுப்பும் ஏற்படும். இதனால் நல்லபடியாக உழைத்து சிறந்த செல்வதை பெறலாம்.